'கடாரம் கொண்டான்' டீசர் ரிலீஸ் குறித்து இயக்குனரின் டுவீட்

Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (14:19 IST)
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகி வருவதாகவும் வரும் பொங்கல் தினமான ஜனவரி 15ஆம் தேதி இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சற்றுமுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'கடாராம் கொண்டான்' டீசர் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த டீசரை பார்த்தபோது முழு திருப்தி ஏற்பட்டதாகவும், இதே திருப்தி சீயானின் ரசிகர்களுக்கும் ஏற்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :