இந்தியன் இரண்டாவது பாகம் உறுதி; டுவிட்டரில் அதிகாரப்பூர்வ தகவல்


Abimukatheesh| Last Updated: சனி, 30 செப்டம்பர் 2017 (16:29 IST)
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டதை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் அடுத்த அஜித்தை வைத்து இயக்க போவதாக முதலில் செய்திகள் பரவியது. பின்னர் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகம் உருவாக போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் இரண்டு செய்திகளுமே வதந்தி என்று பின்னர் செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் கமலுடன் இந்தியன் இரண்டாம் பாகத்தில் இணையபோவது உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகம் எடுத்த போவதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டுவிட்டர் மூலமாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய சினிமாவின் இரண்டு பிரபலங்களுடன் இந்தியன் 2 படத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன் என தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :