1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (12:18 IST)

விஜய்க்கு அட்வைஸ் செய்த கமல்ஹாசன்

விஜய்க்கு அருமையான அட்வைஸ் ஒன்றைக் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

 
 
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு கமல் பேட்டியளித்தபோது, ‘உங்களுக்குப் பிடித்த விஜய் படம் எது?’ என்ற  கேள்வி எழுப்பப்பட்டது.
 
“ரஜினி நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘முள்ளும் மலரும்’. ரஜினி ரசிகர்களுக்கு அந்தப் படம் பிடிக்குமா எனத்  தெரியாது. ஆனால், எனக்கு அந்தப் படம்தான் பிடிக்கும். நான் நிறைய விஜய் படங்களைப் பார்த்திருக்கிறேன். ‘முள்ளும் மலரும்’ மாதிரியான படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
 
விஜய், நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால், இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்பது, சினிமா  ரசிகனாக என்னுடைய சொந்த ஆசை. எல்லா வெற்றி நடிகர்களும் இதைச் செய்ய வேண்டும். ஷாருக் கான், ஆமிர் கான்  போன்றவர்கள் அதைச் செய்கிறார்கள். விஜய்யும் அப்படிச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.  என்னுடைய ‘சகலகலா வல்லவன்’ என்ற கமர்ஷியல் படம் ரிலீஸான அதே வருடத்திலேயே, ‘மூன்றாம் பிறை’ படமும்  ரிலீஸானது. விஜய்யும் அப்படிச் செய்ய வேண்டும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார் கமல்.