கமல்ஹாசனை மீடியாக்கள் வச்சு செய்வது ஏன்?


sivalingam| Last Modified வியாழன், 28 செப்டம்பர் 2017 (06:43 IST)
கமல்ஹாசன் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்தாலும் அறிவித்தார் உள்ளூர் மீடியாக்கள் முதல் தேசிய மீடியாக்கள் வரை கிட்டத்தட்ட அனைத்திலும் கமல்ஹாசன் பேட்டி வந்துவிட்டது. அதிலும் கமல்ஹாசன் ஒன்று சொல்ல, அதை கொஞ்சம் திரித்து மற்ற ஊடகங்கள் செய்தி வெளியிட பின்னர் அது சர்ச்சையாக ஒரே களேபரமாக கமல்ஹாசனின் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன


 
 
ரஜினி பாஜகவுக்கு போவார், தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி ஆகிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கமல் கூறியதாக மீடியாக்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டு பின்னர் கமல் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டது தெரிந்ததே
 
இந்த நிலையில் அமீர்கான் போல் விஜய் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியதை அப்படியென்றால் விஜய் இதுவரை நல்ல படங்களில் நடிக்கவே இல்லையா? விஜய் உங்களுக்கு போட்டியா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு அதற்கு அவர் கூறும் பதில்களையும் திரித்து கூறி ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால் கமல் ரசிகர்கள் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர். ஒருசில மீடியாக்களுக்கு கமல் மீத் என்ன கோபம் என்றே தெரியவில்லை, அவரை வச்சு செய்கின்றன..


இதில் மேலும் படிக்கவும் :