வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (07:52 IST)

டி ஏஜிங் காட்சிகளில் சிரிக்கிறாங்க சார்… கோட் பார்த்த ரசிகரின் பதிவு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோட் படத்தின் 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டதால், தமிழ்நாட்டில் இருந்து ரசிகர்கள் அந்த மாநிலங்களுக்கு சென்று திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது ரசிகர்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டில் படம் பார்த்த ரா புவன் என்ற ரசிகர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “அமெரிக்கா போய் VFX பண்ணோம்னு சொன்னாங்க… செம மொக்கையா இருக்கு. சிரிக்கிறாங்க சார் தியேட்டர்ல’ எனப் பதிவிட்டுள்ளார். டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதும் இதுபோன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.