ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (07:14 IST)

கேரளா மற்றும் கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு முன்பே ரிலீஸான விஜய்யின் ‘GOAT’ திரைப்படம்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முன்பே இந்த படம் சில வெளிநாடுகளிலும், அண்டைமாநிலங்களிலும் தற்போது வெளியாகிவிட்டது. இந்நிலையில் படம் பற்றி பல்வேறு யூகங்கள்  விஜய் ரசிகர்கள் மத்தியில் உலவி வருகின்றன.

தமிழ்நாட்டில் கோட் படத்தின் 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டதால், தமிழ்நாட்டில் இருந்து ரசிகர்கள் அந்த மாநிலங்களுக்கு சென்று திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.  தற்போது அதிகாலைக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் ரசிகர்களின் விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.