வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (06:53 IST)

எந்த படமும் பார்த்துவிட்டு வரவேண்டாம்… விஜய் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு அளித்த ஜாலி அப்டேட்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முன்பே இந்த படம் சில வெளிநாடுகளிலும், அண்டைமாநிலங்களிலும் தற்போது வெளியாகிவிட்டது. இந்நிலையில் படம் பற்றி பல்வேறு யூகங்கள்  விஜய் ரசிகர்கள் மத்தியில் உலவி வருகின்றன.

வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களின் தொடர்பு இந்த படத்தில் இருக்கும் என்றெல்லாம் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் வெங்கட்பிரபு “GOAT படத்தைப் பார்க்கும் முன்னர் வேறு எந்த படமும் பார்த்துவிட்டு வரவேண்டாம். சாதாரணமாக வந்து படத்தை ஜாலியாகப் பார்த்தாலே அது உங்களுக்கு முழு திருப்தியை அளிக்கும்” எனக் கூறியுள்ளார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய விக்ரம் பட ரிலீஸ் போது கைதி படத்தை பார்த்துவிட்டு வர சொன்னது குறிப்பிடத்தக்கது.