Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய நடிகர், நடிகைக்கு சம்மன்

samman
Last Updated: செவ்வாய், 16 ஜனவரி 2018 (13:13 IST)
பொது நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு ராஜஸ்தான் காவல் நிலைய தரப்பில் சம்மம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 22ந் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல பாலிவிட் நடிகர்  சல்மான் கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி, தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதாக, அவர்கள் மீது ரோஜ்கார் அகாரி குடியரசுக் கட்சி சார்பில் மும்பையில் புகார் அளிக்கப்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான அந்த வார்த்தையை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் சாரூ மாவட்ட  டி.எஸ்.பி சம்மன் அனுப்பியுள்ளார்.
actors
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, விழாவில் நான் பேசிய வார்த்தைகளில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் நான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :