போதையில் கார் ஓட்டி விபத்து? காதலனுடன் நடிகையை துரத்திய மக்கள் !
பிரபல நடிகை ஒருவர் தனது காதலருடன் காரில் சென்றபோது விபத்து ஏற்படுத்தும் விதமான அதிவேகத்தில் சென்றதால், பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தரபும் தும்பா பகுதியில் வசிப்பவர் அஸ்வதி பாபு(26). இவர் மலையா சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் நேற்று மாலை தனது காதலன் நவுபலுடன் காரில் கொச்சி குசாட் சந்திப்பு அருகில் சாலையில் சென்றபோது, அங்கு எதிர்வரும் வாகனங்களின் மீது மோதுவதுபோல் வேகத்தில் சென்றது.
இதில், டூவிலரின் சென்றவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் தனது டூவீலர் இந்தக் காரை துரத்திச் சென்று காரை வழிமறித்தார். அதன்பின், பொதுமக்களும் காரை மறித்தனர். கார் உள்ளிருந்து, நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரது காதலன் நவ்பல் கீழிறங்கினர்.
அவர்கள் இருவரும் போதையில் இருப்பது தெரியவே, மக்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர். பின்னர், இருவரையும் பிடித்த போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர் பின்னர், அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது, அதனால், இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றதில் ஆஜர்படுத்தினர்.
இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.