1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (16:50 IST)

முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

mullai
முல்லைப் பெரியாறு அணை குறித்த புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநில அரசுகளின் சம்மதம் தேவை என மத்திய அரசு அறிவித்துள்ளது
 
இதுகுறித்து கேரள எம்பி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார் 
 
தமிழ்நாடு சம்மதமில்லாமல் முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட முடியாது என்பதே அமைச்சரின் பதிலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.