வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜூலை 2022 (11:42 IST)

கேரளாவை அடுத்து டெல்லிக்கும் பரவியது குரங்கு அம்மை: அதிர்ச்சி தகவல்!

Monkey
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உலகின் பல நாடுகளில் மிக வேகமாக குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் கேரளாவை அடுத்து தற்போது டெல்லியில் உள்ள ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 31 வயதான இந்த நபர் எந்த வித வெளிநாட்டு பயணங்களும் செய்யாத நிலையில் திடீரென குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதாக தெரிகிறது
 
இதனை அடுத்து அவர் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது