திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (15:14 IST)

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: மொத்த பாதிப்பு 3 ஆனது

monkey virus
கேரளாவில் ஏற்கனவே இருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 இந்தியா உட்பட பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மை பாதித்த ஒருவர் கண்டறியப்பட்டார்
 
இதனை அடுத்து இன்னொரு வரும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மலப்புரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.