வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (14:35 IST)

தீபிகா - ரண்வீர் திருமணத்தில் நாவூறும் ’ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’

பாலிவுட் திரை நட்சத்திரங்களான தீபிகா - ரண்வீர் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதியில்  இத்தாலியில் லேக்கோமா நகரில் உள்ள மிகப்பிரபலமான ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. கொங்கினி கலாச்சார முறைப்படி முதல்நாளிலும்,அடுத்த நாள் சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதில் குடும்ப நண்பர்கள் , உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் சார்பாக பாலிவுட் பிரபலங்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
 
இந்த தகவலை பலரும் இதன் சுவை போலவே டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.