செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (12:27 IST)

ரன்வீர் திருமண உடையை கிழித்தெறிந்த உறவினர்கள்..!

பாலிவுட் பரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நேற்று இத்தாலியில் வெகு விமர்சியாக நடத்தப்பட்டது. இந்த திருமணத்தில்  மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
 
திருமணத்தில்  மீடியா எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்பதால் புகைப்படங்கள் கசியவில்லை. அதுமட்டுமின்றில் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களின் போன் கேமராக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டது.  .
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ஒரு புகைப்படத்தில் ரன்வீரின் உடைகளை உறவினர்கள் கிழித்துள்ளது போல உள்ளது. அதன் வீடியோ எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
 
தென்னிந்திய பாரம்பரிய முறையான கொங்கனி முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. அதில் மணமகனின் உடைகளை உறவினர்கள் கிழிப்பது வழக்கம். அதற்காகத்தான் இப்படி செய்துள்ளனர்.