1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (10:39 IST)

நடிகர் விஜய் மிகவும் எளிமையானவர்: சர்கார் அனுபவத்தை பகிர்ந்த வரலட்சுமி

நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
தீபாவளிக்கு வெளிவர இருக்கும் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்த வரலட்சுமி சரத்குமாரின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 2 நிமிடத்திற்கும் குறைவாக ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் நடிகை வரலட்சுமி பேசியிருப்பதாவது, “ரொம்ப சந்தோஷமா  இருக்கிறது. 
 
இயக்குநர் முருகதாஸ் இந்த வாய்ப்பையும் நல்ல கதாபாத்திரத்தையும் எனக்கு கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய் மிகவும் எளிமையானவர். இயக்குநர்  முருகதாஸ் மிகவும் இனிமையானவர். நடிப்பதற்க்காக திரைத்துறைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு மிகப்பெரிய கனவு இருக்கும். சன் பிக்சர்ஸ்  தயாரித்திருக்கும் விஜய் படத்தில், இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கிறேன் என்பதே எனது நீண்ட நாள் கனவு. சர்கார்  படத்தை திரையில் பாருங்க. திருட்டு டிவிடி-யில் பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.