திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (20:04 IST)

காவல்துறை ஆணையரை சந்தித்த கருணாகரன்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தனக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதுகுறித்து இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் கருணாகரன் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் அளிப்பது குறித்த தகவல்களை கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அவர் இன்னும் ஓரிரு நாட்களில் விரிவான புகார் ஒன்றை அளிக்கவுள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருணாகரன் உண்மையிலேயே புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஒருசிலர் டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவீட்டுகளை டெலிட் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.