ஜாக்கி சான் படத்தை ப்ரமோட் செய்யும் மாதவன்!
நடிகர் மாதவன் ஜாக்கி சான் நடித்துள்ள வான்கார்ட் படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட உள்ளார்.
ஜாக்கி சான் இப்போது ஆக்ஷன் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் ரசிகர்களுக்காக அவர் சில படங்களில் நடிக்கிறார். அப்படி நடித்த படம் தான் வான்கார்ட். இந்த படம் சீனாவில் ஜனவரி 30 ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் மாதம் ரிலீஸானது. அதையடுத்து அந்த படத்தை இப்போது உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் ஆங்கில மற்றும் இந்தி டிரைலர்கள் வெளியாகி வரவேற்பை ஏற்படுத்தின. இப்போது தமிழ் ரசிகர்களுக்காக தமிழ் வடிவம் வெளியாக உள்ளது. இதை நடிகர் மாதவன் இன்று மாலை டிவிட்டரில் வெளியிட உள்ளார். ஜாக்கி சானின் தமிழ் டப்பிங் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.