செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:35 IST)

செல்வராகவன் படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் – பிப்ரவரியில் படப்பிடிப்பு!

தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

நடிகர் தனுஷும் செல்வராகவனும் தமிழ் சினிமாவின் ஹிட் காம்போ. அவர்கள் இருவரும் கடைசியாக மயக்கம் என்ன படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு  8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த 8 ஆண்டுகாலத்தில் செல்வராகவன் இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது கர்ணன் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய படங்களை முடித்துள்ள தனுஷ் மார்ச் மாதத்தில் செல்வராகவன் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘D  யுடன் என்றாலே எப்போதும் தனிச்சிறப்புதான். (when its with D. its always special). என கூறி அதில் தனுஷை டேக் செய்திருந்தார். மேலும் அதில் அவர் புகைப்படத்தில் எழுதுவது போல உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். அதனால் அந்த படத்துக்கான எழுத்துப் பணிகளை மேற்கொள்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது கேமராவுக்கு அருகில் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முதல்கட்ட பணிகளில் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ப்ரி புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தெரியவந்துள்ளது. தனுஷுக்கு 3 படங்களை செய்து கொடுக்க மொத்தமாக முன்பணம் கொடுத்திருந்த வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணுதான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளாராம். இதற்காக செல்வராகவனுக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மேலும் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.