செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:45 IST)

காய்கறி விலை திடீர் குறைவு- மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள்!

தமிழகத்தில் நல்ல பருவமழைப் பெய்து வருவதால் காய்கறி வரத்து அதிகமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் நவம்பர் மாத  இறுதியில் நல்ல மழைப் பெய்ததால் இப்போது காய்கறிகளின் வரத்து அதிகமாகியுள்ளது. அதனால் சென்னைக் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போது காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தை விட எல்லாக் காயகறிகளும் 20 சதவீதம் வரை விலைக் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் ஆர்வமாக காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.