தெலுங்கிலும் சாதனை படைத்த மெர்சல்

Sasikala| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (14:52 IST)
தமிழில் மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி உலக சாதனை படைத்ததையடுத்து, தற்போது தெலுங்கிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ளார்.

 
சமீபத்தில் தெலுங்கில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் டீசர், தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘அடிரிந்தி’ என்னும் பெயரில் வெளியானது மெர்சல் டீசர். பொதுவாக கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் விஜயின்  படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது தெலுங்கில் வெளியான மெர்சல் டீசர் சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களையும் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு  வெளியாக உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :