குவீன் தெலுங்கு ரீமேக்கின் பஸ்ட்லுக் வெளியீடு

queen remake" width="600" />
sivalingam| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (22:41 IST)
கங்கனா ரனாவத் நடித்த பாலிவுட் சூப்பர்ஹிட் படமான 'குவீன்' படம் தற்போது தென்னிந்தியாவில் உள்ள நான்கு மொழிகளிலும் ரீமேக் ஆக இருக்கின்றது. தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பரூல் யாதவ்வும் நடிக்கவுள்ளனர்


 
 
இந்த நிலையில் குவீன் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கிவிட்டது. சற்றுமுன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த படத்தை தெலுங்கில் நீலண்டா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தை மனுகுமாரன் என்பவர் தயாரிக்கவுள்ளார். இன்று மாலை நடைபெற்ற இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் தமன்னா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :