மெர்சல் டி20 போட்டி மாதிரி இருக்கும்; அட்லீ


Abimukatheesh| Last Updated: திங்கள், 2 அக்டோபர் 2017 (17:21 IST)
மெர்சல் 20 ஓவரில் 300 ரன்கள் அடிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. படமே டி20 கிரிக்கெட் போட்டி மாதிரி இருக்கும் என இயக்குநர் அட்லீ கூறியுள்ளார்.

 

 
மெர்சல் திரைப்படம் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தீபாவளிக்கு திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் மெர்சல் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பேசிய இயக்குநர் அட்லீ கூறியதாவது:- 
 
தெறி திரைப்படம் 50 ஓவரில் 300 ரன்கள் அடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் மெர்சல் 20 ஓவரில் 300 ரன்கள் அடிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. படமே டி20 கிரிக்கெட் போட்டி மாதிரி இருக்கும்.
 
ரஹ்மானிடம் தமிழுக்காக ஒரு பாடல் உருவாக்கலாம் என்று கூறி உருவான பாடல்தான் ஆலப்போறான் தமிழன். கிராமத்து இளைஞராக வரும் விஜய்க்குதான் மாஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :