அமீர்கான் செய்ததை விஜய் ஏன் செய்யவில்லை?


sivalingam| Last Updated: திங்கள், 2 அக்டோபர் 2017 (22:41 IST)
சமீபத்தில் கமல் அளித்த பேட்டி ஒன்றில் விஜய், அமீர்கான் போன்று நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் போல் நடிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அவரது கொள்கையாவது கடைபிடிக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


 
 
அமீர்கான் நடித்த சூப்பர் ஹிட் படமான 'டங்கல் படத்தை பாகிஸ்தானில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் பாகிஸ்தான் அரசு இந்திய தேசிய கீதத்தை கட் செய்தால்தான் பாகிஸ்தானில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என்று கூறியது.
 
இதனால் பாகிஸ்தானில் டங்கல்' படத்தை வெளியிட வேண்டாம் என்று அமீர்கான் உள்பட படக்குழுவினர் முடிவு செய்தனர். தேசிய கீதத்தை விட அந்நாட்டில் இருந்து கிடைக்கும் வசூல் பெரிதல்ல என்பதுதான் டங்கல் படக்குழுவினர்களின் முடிவு
 
ஆனால் அதே நேரத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தில் தமிழில் 'ஆளப்போறான் தமிழன்' என்றும் தெலுங்கில் 'ஆளப்போறான் தெலுங்கன்' என்றும் பாடல் வரிகள் உள்ளனர். மேலும் தமிழில் எம்ஜிஆர் ரசிகராகவும், தெலுங்கில் என்.டி.ஆர் ரசிகராகவும் விஜய் நடித்துள்ளார். தெலுங்கு மாநிலங்களில் கிடைக்கும் வசூலுக்காக கொள்கையையே மாற்றி கொள்வது சரியா? என்பதே சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :