Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வலியால் துடித்த வீரர்; உதவாமல் கடந்து சென்ற சக வீரர்கள்: வைரல் வீடியோ!!

Last Updated: புதன், 3 ஜனவரி 2018 (15:48 IST)
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விதர்பா அணி வெற்றிப்பெற்று வரலாற்ரு சாதனை படைத்தது. தற்போது அந்த போட்டியில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி துவங்கிய ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில், டெல்லி மற்றும் விதர்பா அணிகள் விளையாடியது. இதில், விதர்பா அணி வெற்றிப்பெற்றது. மேலும், விதர்பா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதல் முறை விதர்பா அணி ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் விதர்பா அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பவுன்சர் பந்தால் காயம்பட்டு சுருண்டு விழுந்து மைதானத்தில் வலியால் துடித்திருக்கிறார். ஆனால், எந்த வீரரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
மேலும் களத்தில் இருந்த நடுவரும் அவருக்கு உதவாமல் இருந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தால் கிரிக்கெட் போட்டி ஜெண்டில் மேன் விளையாட்டுதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இணையதளத்தில் பலரும் கருத்து தெரிவித்தும், இந்த நிகழ்வை விமர்சித்தும் வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :