Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராகும் மிதாலி ராஜ்?

Mithali Raj
Last Updated: செவ்வாய், 2 ஜனவரி 2018 (17:24 IST)
இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக மிதாலி ராஜ் வர வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலகில் உள்ள பெண் கிரிட்கெட் வீராங்கனைகளில் சிறந்தவர். சச்சின் கையால் பேட் பரிசு பெற்ற ஒரு பெண். தற்போது உலகளவில் அனைவரலும் புகழப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை விட ஒருபடி மேல் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டெட் எக்ஸ் என்ற உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மிதாலி ராஜ் கலந்துக்கொண்டு பேசினார். இதில் தனது வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மிதாலியிடம் நிறைய கேள்விகள் கேட்டார்.
 
இறுதியாக நீங்கள் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டும். உங்களால் முடியுமா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மிதாலி கூறியதாவது:-
 
என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்வேன். களத்தில் நீங்கள் நிற்கும் போது எல்லோரும் உங்களைத்தான் பார்ப்பார்கள். அப்போது உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். அந்த பொறுப்புணர்வு இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :