வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (16:50 IST)

சேவக்கை தக்க சமயத்தில் பழி தீர்த்த சச்சின்!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் சேவக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேவாக்கை பழி தீர்த்துள்ளார் சச்சின். 


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக். இவர் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை டிரிபிள் செஞ்சுரி அடித்த ஒரே இந்திய வீரர் சேவக் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவருக்கு சச்சின் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் வீரு!  இந்த புதிய ஆண்டில், சிறப்பானதொரு துவக்கம் அமையட்டும். களத்தில் எப்போதும், நான் எது சொன்னாலும் அதை தலைகீழாகத்தான் செய்வாய். அதனால், இந்த முறை என்னிடமிருந்து ஒன்று என தனது பிறந்தநாள் வாழ்த்தை தலைகீழாக பதிவிட்டுள்ளார்.