Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் 5வது தொடர் தோல்வி: கமல்-சச்சினுக்கு வந்த சோதனை

kamal sachin" width="600" />
sivalingam| Last Modified வியாழன், 5 அக்டோபர் 2017 (23:52 IST)
புரோ கபடி தொடர் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதிலும் உள்ள மைதானங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன


 
 
இதுவரை தோல்வியில் துவண்ட தமிழ் தலைவாஸ் அணி சொந்த மண்ணிலாவது வெற்றியை குவிக்கும் என்று தமிழக கபடி ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. ஆம், சென்னையில் இன்று நடந்த போட்டி உள்பட தொடர்ந்து 5 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.
 
இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-45 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தமிழ் தலைவாஸ் அணி இழந்தது
 
தமிழ் தலைவாஸ் அணிக்கு சச்சின் உரிமையாளராகவும், கமல்ஹாசன் விளம்பர தூதராகவும் இருப்பதால் இவர்கள் இருவருக்கும் இந்த தொடர் தோல்வி வருத்தத்தையும் சோதனையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :