திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:01 IST)

50 ஓவர்கள் தாக்கு பிடிக்காமல் ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான்.. தெ.ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியின்  கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஷகீல் 52 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவின் ஷாம்ஷி அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் ஜான்சென் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது. அந்த அணி இந்த இலக்கை ஏற்றி மீண்டும் ஒரு வெற்றியை பெறுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் தற்போது நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பாகிஸ்தான் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணி அடுத்த சுற்று செல்வது  இயலாத காரியம் ஆகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran