திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:09 IST)

ஒரே இரவில் நாங்கள் மோசமான அணியாகிவிட மாட்டோம்… இங்கிலாந்து கேப்டன்!

பெங்களூருவில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது.

தொடர் தோல்வி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “அணியின் கேப்டனாக நான் மிகவும் வருந்துகிறேன். எங்களால் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாதது ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக உள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். ஒரே இரவில் நாங்கள் மோசமான அணியாக ஆகிவிட மாட்டோம். இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளால் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை அணி மேல் வைத்து வருகின்றனர்.