ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (13:36 IST)

உலகக் கோப்பை 2023: புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம்

Icc World cup 2023
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடர் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா. பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கு தங்கள் திறமையைக் காட்டி விளையாடி வருகின்றனர்.
 

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் அணிகளின் புள்ளிப்பட்டியல் நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியா5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 4 வெற்றி 1 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், இலங்கை 4 புள்ளிகளுடன் 5வது இடத்திலும்,  பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும்,  ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும், பங்களதேஷ், இங்கிலாந்து நெதர்லாந்து தலா 2 புள்ளிகளுடன் முறையே 8,9,10 வது இடத்தில் உள்ளன.