ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:24 IST)

பார்ஸிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி விலகல்!

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சற்றுமுன் பார்சிலோனா அணியின் டுவிட்டர் பக்கத்தில் மெஸ்ஸி இனி தங்களது அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணிக்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காலாவதி ஆனதை அடுத்து அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது
 
பார்சிலோனா அணிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் இதனால் மீதி இனி தொடர்ந்து பார்சிலோனாவில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தனது தாய்நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாட விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது