ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (08:42 IST)

தாக்குதலுக்குள்ளான மார்கஸ் ரஷ்போர்ட்; கலங்க வைத்த சிறுவனின் கடிதம்!

ஈரோ உலகக்கோப்பை கால்பந்தில் விளையாடிய மார்கஸ் ரஷ்போர்ட் இனரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் சிறுவன் எழுதியுள்ள கடிதம் வைரலாகியுள்ளது.

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியில் இத்தாலி – இங்கிலாந்து மோதிக் கொண்ட நிலையில் பெனால்டி ஷாட்டில் இங்கிலாந்து வீரர்கள் கோலை தவறவிட்டதால் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முக்கியமாக பெனால்டி ஷாட் வாய்ப்பு அளிக்கப்பட்ட மார்கஸ் ரஷ்போர்ட் உள்ளிட்ட மூன்று இங்கிலாந்து வீரர்களும் கருப்பினத்தவர் என்பதால் இனரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் மார்கஸ் ரஷ்போடிற்கு கடிதம் எழுதியுள்ள 9 வயது சிறுவன் “டியர் ரஷ்போர்ட். கடந்த ஆண்டில் ஏழை மக்களுக்கு உதவி என்னை கவர்ந்தீர்கள், தற்போது அனைத்து தாக்குதல்களையும் அமைதியாக கடந்து சென்று கவர்ந்துள்ளீர்கள். என்றுமே நீங்கள்தான் என் ஹீரோ. மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள்” என எழுதியுள்ளார்.