1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (08:23 IST)

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்திய அணி அதன் பிறகு சொதப்ப ஆரம்பித்துள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியடைந்து மூன்றாவது டெஸ்ட்டில் போராடி டிரா செய்தது.

இதையடுத்து மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கே எல் ராகுல் வலது கையில் காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாக்ஸிங் டே போட்டிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அவரின் காயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக கே எல் ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.