அஸ்வின், ஜடேஜா மோதல்?? இந்திய அணிக்கு வெவ்வேறு கோணத்தில் சிக்கல்!!

Last Updated: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (21:01 IST)
இந்திய அணி வரும் ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிரிக்கெட் தொடர் ஆட இருக்கிறது. இது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

ஆனால், இந்திய அணிக்கு வெவ்வேறு கோணத்தில் சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. இதனை இந்திய கேப்டன் கோலி, எவ்வாறு சமாலிப்பார் என்பது கேள்விகுறியாக உள்ளது. முன்னர் இந்திய அணிக்கு சரியான ஓப்பனிங் இல்லாமல் தவித்தனர்.


ஆனால் தற்போது நிறைய ஓப்பனிங் வீரர்களை வைத்துக் கொண்டு யாரை எங்கு களமிறக்குவது என தெரியாமல் தவித்து வருகிறது.
தற்போது, டெஸ்ட் போட்டிக்கு தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் என மூன்று ஒப்பனர்கள் இருக்கிறார்கள்.


இதில் யாரை இறக்கிவிடுவது என தெரியாமல் தற்போது கோலி குழம்பி கொண்டு இருக்கிறார். மேலும், இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையாக இருப்பது ஸ்லீப். இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய ஸ்லீப்பர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள்.


தோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்த வரை 4 பவுலர்களை மட்டும் பயன்படுத்தி வந்தார். ஆனால் கோலி 5 பவுலர்களை பயன்படுத்த தொடங்கினார்.
இந்நிலையில் தற்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டு உள்ளதாம். அஸ்வின் வெளிநாட்டில் சரியாக பந்து வீசுவது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அஸ்வினை களமிரக்குவதா இல்லை ஜடேஜாவை களமிறக்குவதா என்ற குழப்பத்தில் தவிக்கிறார் கோலி.


இதில் மேலும் படிக்கவும் :