வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (16:42 IST)

ரூ.2 கோடி டூ ரூ.12 கோடி: விணாகாத கோலியின் கணக்கு!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதனையடுத்து புதிய ஊதிய உயர்வு தொடர்பான ஆலோசனையை நடத்த பிசிசிஐ முடிவெடுத்தது.  
 
ஆனால், ஆலோசனைக்கு முன்பே கேப்டன் விராட் கோலி, தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத்ராயை சந்தித்து சம்பள உயர்வு குறித்து கோரிக்கை வைத்தனர்.
 
கோலியின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 6 மடங்கு வரை உயர்த்தப்படுகிறது என கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 
தற்போது ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் சம்பளம் 6 மடங்காக உயர்த்தப்படுகிறது.  
 
ஏ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் இனி வருடத்திற்கு ரூ.12 கோடி கிடைக்கும் என தெரிகிறது. ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே, புஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர். 
 
ஆனால், கேப்டன் பதவியில் கோலி இருப்பதால் இவருக்கு ரூ.12 கோடியை விட அதிக சம்பளம் வழங்கப்படக்கூடும். பி கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்படும். பி கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ‌ஷமி உள்ளிட்ட 9 வீரர்கள் உள்ளனர்.
 
சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்படும். சி கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.