Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே வாய்ப்பு: ரகானேவுக்கு ஆதரவு கோரும் காம்ப்ளி!!

Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (20:30 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி ரகானேவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன் ரகானே.
ரகானே சமீபகாலமாக பார்ம்மில் இல்லை. இவர் கடைசியாக பங்கேற்ற 5 டெஸ்ட் இன்னிங்சில் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நியூசிலாந்து தொடருக்கு பின் இவர் பங்கேற்ற டெஸ்டின் இவரது சராசரி வெறும் 31.75 ஆக மட்டுமே உள்ளது.


இதனால், தென் ஆப்பிரிக்க தொடரில், ரகானேவின் தேர்வு குறித்து பெரும் விவாதம் நடந்துள்ளது. இதுகுறித்து காம்ப்ளி கூறுகையில், ரகானே தற்போது தடுமாறுவது உண்மைதான். ஆனால் ஒரே ஒரு சான்ஸ் கிடைத்து ரன்கள் சேர்க்க துவங்கிவிட்டால், அவரை தடுப்பது மிகவும் கடினம். அதே போல தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய வீரர்கள் சாதிக்க கேப்டன் கோலியின் ஆக்ரோஷம் மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :