Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

48 மாதங்கள் நான் ஸ்டாப் கிரிக்கெட், எனக்கும் ஓய்வு தேவை: கோலி!!

Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (18:02 IST)
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

இதன் பின் தற்போது இலங்கை அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரே ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றுள்ளது.

அதேபோல், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி 2 வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது விராட் கோலி 893 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளார்.


இந்நிலையில் கோலி, சுமார் 48 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் எனக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை என தெரிவித்துள்ளார். மேலும், கடைசியாக நான் ஓய்வு எடுத்த போது அந்த நாட்களை கடத்துவது கடினமாக இருந்தது. ஆனால் எனது உடலே தற்போது ஓய்வைதான் கேட்கிறது. தென் ஆப்ரிக்க தொடருக்கு முன்பாக இந்த ஓய்வு எனக்கு கண்டிப்பாக தேவை என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :