Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய அணிக்கு திரும்ப கேப்டன் பதவி உதவுமா? அஸ்வின்

Last Modified புதன், 28 பிப்ரவரி 2018 (05:03 IST)
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்த முறை பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து இந்திய அணிக்கு திரும்ப திட்டமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், கண்டிப்பாக அந்த எண்ணம் இல்லை. என்றும், நான் இந்திய அணிக்கு நான் திரும்ப வேண்டும் என்று இருந்தால், அது தானாக நடக்கும்' என்றும் கூறினார்

மேலும்
ஒவ்வொரு ஆண்டும் எப்படி ஐபிஎல் தொடருக்கு விளையாடுவேனோ, அதே மனநிலையுடன்தான் பஞ்சாப் அணிக்கும் விளையாடுவேன் என்றும், ஆனால் இந்த முறை தனக்கு கேப்டன் என்ற மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது என்றும், இந்த சவாலை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :