Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேர்ன் வார்னே! ஆனால்....

Last Modified செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (17:48 IST)
கிரிக்கெட் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் 11வது ஆண்டாக இவ்வாண்டு நடைபெறவுள்ளது. தடை செய்யப்பட்டிருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த ஆண்டு முதல் மீண்டும் களமிறங்கவுள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தையும் பெற்றுத்தந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்னே, தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இம்முறை அவர் பிளேயராக அல்லாமல் ஆலோசகராக இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஷேன் வார்னே தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக சேர்வதில் மகிழ்ச்சி.’ என குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :