ரூ.150 இருந்தால் போதும். FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்கலாம்


sivalingam| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (06:58 IST)
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் இந்திய மக்களின் மனதில் நிற்கும் விளையாட்டு கிரிக்கெட் ஒன்றே. கிரிக்கெட்டை அடுத்து தற்போது டென்னிஸ், பேட்மிண்டன் ஆகியவை புகழ்பெற்று வருகிறது


 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் கால்பந்துக்கு இந்தியாவில் ரசிகர்கள் குறைவாகவே உள்ளது. எனவே இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மக்களிடம் பரப்பும் நோக்கத்தில் 
FIFA தொடர் முதன்முதலில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
 
பொதுமக்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதும் ஈர்ப்பு வரவேண்டும் என்பதால் இந்தியாவின் கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய ஆறு இடங்களில் அக்டோபர் 6-ம் தேதி முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை நடைபெறுகிறது.
 
இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் வெறும் ரூ.150 மட்டுமே. டிக்கெட்டுக்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்புவோர்  FIFA வின் இணையதளத்துக்குச் சென்று, நமக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்


இதில் மேலும் படிக்கவும் :