கமல்ஹாசனை லீடர் ஆக்கும் முன்னணி இயக்குனர்


sivalingam| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (00:08 IST)
கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்பு அவரை லீடராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்,


 
 
ஆம், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்திற்கு 'லீடர்' என்ற டைட்டிலை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் வைக்க கமல் மற்றும் ஷங்கர் இணைந்து முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும் இந்த படத்தில் ஆளும் அரசை நக்கலடிக்கும் வகையில் காட்சிகளும் வசனங்களும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :