Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புறக்கணிக்கப்படும் அஸ்வின்; இந்திய அணிக்குள் அரசியல் போக்கு: காரணம் என்ன??


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 9 அக்டோபர் 2017 (20:16 IST)
இந்திய சுழர்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது நடக்கும் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவது இல்லை இதற்கு காரணம் அணிக்குள் நடக்கும் அரசியல் போக்கு என பேசப்படுகிறது. 

 
 
தோனி இந்திய அணியின் கேப்டனான இருந்த போது அஸ்வில் அணியின் சிறந்த வீரராக இருந்தார். அணியில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் நீண்ட காலத்திற்கு நம்பர் 1 சுழற் பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 
 
இந்நிலையில் அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில், அணியின் முக்கிய பவுலரான அஸ்வின் வெளியேற்றப்பட்டார். 
 
அஸ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களம் இறக்கப்பட்டனர். இது குறித்து அஸ்வின் கூறியுள்ளதாவது, என்னுடைய திறமையின் காரணமாக கண்டிப்பா விரைவில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வாய்ப்பும் என் வீடு தேடி வரும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், கோலியின் தலைமைக்கு கீழ் நான் விளையாடுவேனா என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். 
 
அஸ்வின் நிலைதான் தற்போது ரெய்னாவிற்கும். அஸ்வின் மற்றும் ரெய்னா இருவரும் தோனிக்கு செல்ல பிள்ளைகளாகவே இருந்துள்ளனர். இதனால் தற்போது தோனிக்கு எதிராக எழும் விமர்சனங்களுக்கும் இவர்களது புறக்கணிப்புக்கும் தொடர்ப்பு இருப்பது போன்ற சிந்தனை உருவாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :