செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:56 IST)

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும் இடது கை பேட்ஸ்மேனான இந்த வைபவ், பீகார் கிரிக்கெட் அணிக்காக ரஞ்சிக் கோப்பை தொடரில் தன்னுடைய 12 ஆவது வயதில் களமிறங்கி விளையாடி கவனம் பெற்றவர். இவர் இதற்கு முன்னர் மிகக் குறைந்த வயதில் முதல் தரக் கிரிக்கெட் ஆடியவர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆனால் இப்போது அவரின் உண்மையான வயது 15 எனவும், வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியுள்ளதாகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஆனால் வைபவ்வின் தந்தை அதை மறுத்துள்ளார். தன்னுடைய மகனின் வயதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.