செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:18 IST)

இலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க: விறுவிறுப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அனி நேற்று டர்பன் நகரில் அந்நாட்டு அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியை 235 ரன்களில் இலங்கை சுருட்டியது. 
 
இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணியை 191 ரன்களில் சுருட்டி தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்த்து. தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா இன்றைய ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. இதனால்  அந்த அணி தற்போது 170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
 
இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் ஸ்டெயின் அபாரமாக பந்துவீசி 4 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது