பூமிக்கு வந்த ஏலியன்ஸ்... அதிர்ச்சியடைந்த விவசாயி..பரபரப்பு தகவல்..

alience
Last Updated: புதன், 6 பிப்ரவரி 2019 (13:29 IST)
இலங்கை தேசத்தில் அடுக்கம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள மனிதர்கள் நடமாடுவதாக தகவல் பரவியது.இதனையடுத்து அப்பகுதி மக்கள் பீதிக்கு ஆளாகினர்.
மேலும் ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்திருந்த பயிர்களுக்குகாவலாக கடந்த 2 ஆம் தேதியன்று இருந்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து 2 அடி உயரமுள்ள நீளமான தலையுடைய சிவப்புநிறத்தில் ஒரு உருவத்தை பார்த்துள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி அருகில் உள்ள பகுதிக்கு சென்று நண்பர்களை அழைத்து வருவதற்குள் அத்ந உருவம் மறைந்து விட்டது என்று அந்த விவசாயி தெரிவித்திருக்கிறார்.மேலும்  அதன் காலடித் தடங்கல் அனைத்தும் அந்த வினோதமான ஏலியன்களைப் போன்று இருந்ததாக தெரிவித்தார். அத்துடன் அடிக்கடி பறக்கும் தட்டுகள் தென்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இத்தனை நடந்து வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து இதுவரை எந்தவிதமான விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :