ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (11:42 IST)

மச்சி.. ஐ லவ் யூ டா..! உயிர் நண்பனுக்கு திருமண ப்ரபோஸ் செய்த கால்பந்து வீரர்!

Australian Footballer
ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் தனது நண்பருக்கு மைதானத்தில் வைத்து திருமண ப்ரபோஸ் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



சமீப காலமாக உலக நாடுகள் பலவற்றில் தன்பாலின காதல் அங்கீகரிக்கப்பட்டு வரும் நிலையில், பல தன்பாலின திருமண சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அந்த வகையான சம்பவம் ஆஸ்திரேலியாவிலும் நடந்து வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தொழில்முறை கால்பந்து வீரரான ஜோசுவா ஜான் கேவல்லோ, அங்குள்ள அடிலெய்டு யுனைடெட் க்ளப் அணியின் மிட்ஃபீல்டராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தனது நண்பரான லெய்டனை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.


சமீபத்தில் கால்பந்து மைதானத்தில் வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜோசுவா ப்ரபோஸ் செய்ய அதனால் லெய்டன் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் ’என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K