2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : மீனம்

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (13:13 IST)
பலம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
குருபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சித்தர்களின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை  விட்டொழித்து விட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். 
மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத்  திட்டங்களில் சேர்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில்  நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள்.  எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராக சிந்திக்கத் தொடங்குவீர்கள். புது  வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.
 
பலவீனம்:
 
முதலீடுகளில் கவனமுடன் இருப்பது நல்லது. தீர ஆலோசித்து முடிவுகளை எடுங்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பார்ட்னர்களிடம் கவனமுடன் இருக்கவும்.  தேவையில்லாமல் ஒருவரைப் பற்றி நீங்கள் கருத்து சொல்ல வேண்டாம். பின்னர் அது பெரிய பிரச்சனையாகிவிடும். கவனம் தேவை. அதிக லாபம் எதிர்பார்த்து  அகலககால் வைக்க வேண்டும். படிப்படியாக கிடைக்கும் லாபத்தையே கவனமுடன் செய்வது நலம்.
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை தரும். துன்பங்களில் இருந்து விடுபடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :