2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : கும்பம்

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (13:04 IST)
பலம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
 
சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சனீஸ்வரனின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை  காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிது கடன் வாங்கவும்  நேரலாம். 
சகோதர  சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது  அமைகிறது. வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது  என்பதை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் உங்கள் உயர் அதிகாரிகளின் பாரட்டுக்களைப் பெறுவீர்கள். சக பணியாளர்களால் உங்களின் வேலைப்பளு  குறையும். அவர்களிடமும் பணிவாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்துடன் நீண்ட பயணம் சென்று  வருவீர்கள்.
 
பலவீனம்:
 
உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக  விற்பனை ஆகாமல்  இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடலாரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால்  அனைத்தும் சரியாகிவிடும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க  வேண்டாம்.
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 90% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு  இலுப்பை எண்ணை விட்டு ஏற்றவும்.


இதில் மேலும் படிக்கவும் :