திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:25 IST)

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

மிதுனம் - (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய மிதுனராசி யினரே நீங்கள் பிடிவாத குணமும் உடையவர்.

இந்த குருப் பெயர்ச்சியில் ஆக்கப்பூர்வமான  யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.   மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது.  
 
தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரி களை அனுசரித்து செல்வது நல்லது.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
 
பெண்களுக்கு: வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.
 
மாணவர்களுக்கு: அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.
 
பரிகாரம்: பெருமாளை வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்