திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:25 IST)

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

ரிஷபம் - (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷப ராசியினரே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர். இந்த குருப் பெயர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய  நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
 
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள்  சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள்  மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள்  ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.
 
பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது  நல்லது. 
 
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்